/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உடைந்து விழுந்த மரக்கிளை; கம்பிகள் அறுந்ததால் மின்தடை
/
உடைந்து விழுந்த மரக்கிளை; கம்பிகள் அறுந்ததால் மின்தடை
உடைந்து விழுந்த மரக்கிளை; கம்பிகள் அறுந்ததால் மின்தடை
உடைந்து விழுந்த மரக்கிளை; கம்பிகள் அறுந்ததால் மின்தடை
ADDED : ஆக 25, 2025 09:06 PM

குன்னுார்; குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பழமை வாய்ந்த மரங்கள் விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. குறிப்பாக, சிம்ஸ்பார்க் -ஐ.டி.ஐ., ஹைபீல்டு சாலையில், யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் பெரும்பாலான கிளைகள் விழும் அபாய நிலையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று பகல், 12:30 மணியளவில் கற்பூர மர கிளை உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், இந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் இப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதன் பின் சீராக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் அபாயகரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டவும், சாலை ஓரத்தில் வீணாக கிடக்கும் மர துண்டுகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.