நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு முதல் அவ்வப்போது மழை பெய்தது.
இந்நிலையில், ஓட்டுப்பட்டறை சாலையில், மோர்ஸ் கார்டன் அருகே மின்கம்பம் சாய்ந்தது. இதனால், சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.நேற்று காலையில் மினி பஸ் உட்பட கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் மின்வாரியத்தினர் கடுங்குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மின் விநியோகம் சீரானது. இதே போல கீழ் சிங்காரா எஸ்டேட், கோழிக்கரை இடையே வனப்பகுதி அருகே மின்கம்பம் விழுந்தது. இந்த பகுதிக்கு மின் ஊழியர்கள் நடந்து சென்று கொட்டும் மழையிலும் சீரமைத்ததால் மின்தடை சீரானது.