ADDED : பிப் 28, 2024 09:31 PM

சோமனுார் : விசைத்தறி சங்க தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சோமனுாரில் விசைத்தறியாளர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம்நடந்தது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவரான பழனிசாமி, கடந்தாண்டு பிப்., மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையறிந்து அவரது மனைவி கருப்பாத்தாளும் இறந்தார். இருவருக்கும், பல்லடம் அடுத்த அய்யம்பாளையத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.
அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, விசைத்தறி சங்கம் சார்பில் அமைதி ஊர்வலம், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் குமாரசாமி தலைமையில், சோமனுாரில் இருந்து நினைவிடம் உள்ள அய்யம்பாளையம் வரை, ஜோதி ஏந்தி விசைத்தறியாளர்கள் ஊர்வலமாக சென்றனர். நினைவிடத்தில், அனைத்திந்திய ஜவுளி கூட்டமைப்பு, பருத்தி அபிவிருத்தி கழக தலைவர் ராஜ்குமார் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். திரளான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.

