/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டம் : ஒரு நாள் பயிற்சி முகாம்
/
பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டம் : ஒரு நாள் பயிற்சி முகாம்
பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டம் : ஒரு நாள் பயிற்சி முகாம்
பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டம் : ஒரு நாள் பயிற்சி முகாம்
ADDED : மார் 18, 2025 05:14 AM
ஊட்டி, : ஊட்டி தமிழகம் மாளிகையில் பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டம், குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை சமூக பணி கல்லுாரி சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் சார்பில் நடந்த முகாமில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுசீந்திரா பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற முதல் அமர்வில் பேசிய ரமேஷ் நாதன், வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விளக்கினார். இரண்டாவது அமர்வில் பங்கேற்ற, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முருகப்பன், 'மாவட்ட வட்ட விழி கண் மற்றும் கண்காணிப்பு குழுக்களின் கடமைகளும்; பொறுப்புகளும்,' என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.
'பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளை புரிந்து கொள்வதுடன், பாதிப்புக்கு உள்ளோர்களுக்கான நீதி கிடைப்பதன் அவசியம்,' குறித்து வக்கீல் ஆனந்தன் பேசினார்.
சத்தியமங்கலம் கல்வி உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் கருப்புசாமி, 'சட்ட நடைமுறைகள் மற்றும் கள அனுபவங்கள்,' குறித்து பேசினார். நிகழ்ச்சியில், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பலர் பங்கேற்றனர்.
கோத்தகிரி ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் ராஜசேகர் நன்றி கூறினார்.