/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மாணவியர் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பெருமிதம்
/
பள்ளி மாணவியர் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பெருமிதம்
பள்ளி மாணவியர் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பெருமிதம்
பள்ளி மாணவியர் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பெருமிதம்
ADDED : செப் 07, 2025 09:08 PM

குன்னுார்; குன்னுார் அருகே சோகத்தொரை கிராமத்தில், மாணவியர் சஞ்சனா ஓரான், சமிக்ஷா, வினிஷா ஆகியோர் எழுதிய 'தி வைல்ட் எலிபண்ட்ஸ்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், மாவட்ட எஸ்.எஸ்., உதவி திட்ட அலுவலர் அர்ஜுனன், மாவட்ட மைய நுாலகர் ரவி ஆகியோர் முதல் பிரதிகளை வெளியிட்டனர்.
கேத்தி என்.எஸ்., ஐயா பள்ளி முதல்வர் கணேசன், வட்டார கல்வி அலுவலர் பாண்டியம்மாள் சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் பேசுகையில்,''ஒவ்வொரு குழந்தையும் ஆற்றலுடன் பிறக்கின்றன. அதனை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அனைத்து குழந்தைகளும் சாதனையாளர்களாக மாறுவர். ஆனால், இன்றைய கல்வி முறை பணம் சம்பாதிக்க என்ற ரீதியில் மாறிவிட்டது. குழந்தைகளை பணம் வழங்கும் ஏ.டி.எம்., கருவிகளாக மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் ஆற்றல் மழுங்கிப் போகிறது. அரசு பள்ளிகளில் கலை இலக்கியம் விளையாட்டு போன்றவற்றை வளர்க்க செயல்பாட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமாரி, நுாலகர் சாந்தி, புஷ்பா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சந்திரசேகர் வரவேற்றார். ஆசிரியர் புஷ்பா நன்றி கூறினார்.