/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 502 மாணவர்களுக்கு பணி ஆணை
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 502 மாணவர்களுக்கு பணி ஆணை
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 502 மாணவர்களுக்கு பணி ஆணை
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 502 மாணவர்களுக்கு பணி ஆணை
ADDED : டிச 29, 2025 06:19 AM
ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில், '78 நிறுவனங்கள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதில், 912 மாணவர்கள், 890 மாணவிகள்,' என, மொத்தம், 1,802 பேர் பங்கேற்றனர். அதில், தேர்வான, நான்கு மாற்றத்திறனாளிகள் உட்பட, 267 மாணவர்கள், 235 மாணவிகள் என, 502 பேருக்கு, எம்.பி., ராஜா பணி நியமன ஆணை வழங்கினார்.
முகாமில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.