/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் கிடைக்காத காந்திநகர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாறும்
/
அடிப்படை வசதிகள் கிடைக்காத காந்திநகர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாறும்
அடிப்படை வசதிகள் கிடைக்காத காந்திநகர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாறும்
அடிப்படை வசதிகள் கிடைக்காத காந்திநகர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாறும்
ADDED : டிச 29, 2025 06:20 AM
குன்னுார்: 'குன்னுார் உபதலை ஊராட்சி காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் உபதலை ஊராட்சி காந்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கழிவு நீர் கால்வாய் அமைத்து தரவும், குப்பை தேங்கி அடைப்பு ஏற்படும் இடங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
கோவில் பகுதி, காந்திநகர் - சோகத் தொரை சாலை, பழத்தோட்ட சாலை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர எரியாமல் இரவு நேரங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
காந்தி நகருக்கான கிணற்று மோட்டார் பழுது சரிசெய்து இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை இல்லை.
இரவு நேரங்களில் கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தவும் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
காந்திநகர் பொதுமக்கள் நற்பணி சங்க தலைவர் சபாபதி கூறுகையில்,''கிராமத்திற்கு குடிநீர் மேல்நிலை தொட்டி, சமுதாய கூடம் அருகே பயனின்றி கிடக்கும் இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்தல், கழிப்பிட வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளை வரும் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு சீரமைத்து தர வேண்டும். மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பப்பட்டுள்ளது,''என்றார்.

