/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தொழிற்சாலைகளின் கூடுதல் விலை அறிவிப்பால்... நெருக்கடி! இலை வரத்து குறைவால் கூட்டுறவு தொழிற்சாலைகள் திணறல்
/
தனியார் தொழிற்சாலைகளின் கூடுதல் விலை அறிவிப்பால்... நெருக்கடி! இலை வரத்து குறைவால் கூட்டுறவு தொழிற்சாலைகள் திணறல்
தனியார் தொழிற்சாலைகளின் கூடுதல் விலை அறிவிப்பால்... நெருக்கடி! இலை வரத்து குறைவால் கூட்டுறவு தொழிற்சாலைகள் திணறல்
தனியார் தொழிற்சாலைகளின் கூடுதல் விலை அறிவிப்பால்... நெருக்கடி! இலை வரத்து குறைவால் கூட்டுறவு தொழிற்சாலைகள் திணறல்
UPDATED : டிச 17, 2025 08:09 AM
ADDED : டிச 17, 2025 06:38 AM

ஊட்டி: இலை வரதது குறைவை காரணம் காட்டி, தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் பசுதேலைக்கான கூடுதல் விலை அறிவிப்பால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்குள்ள, 16 கூட்டுறவு தொழிற்சாலைகளில், 25 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக இருந்து, தங்கள் தோட்டங்களில் பசுந்தேயிலையை வழங்கி வருகின்றனர். இதற்கு கிடைக்கும் விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
25 ஆண்டுகளாக போராட்டம் இந்நிலையில், ' இலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோவிற்கு, 40 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்,' என்ற கோரிக்கை விவசாயிகள், 25 ஆண்டுகளாக முன் வைத்துள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத நிலையில், தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும், இலைக்கான விலையை கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம் முறையாக வழங்கப்படாமல் மறுத்து வருவதால் விவசாயிகள் பதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இவர்கள் பல ஆண்டுகாக பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், சிறு விவசாயிகள், இலை முழுவதையும் அந்தந்த பகுதியில் உள்ள, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட முழுவதும் உறை பனி தென்பட்டுள்ளது. தேயிலை செடிகள் கருகி வருவதால் தேயிலை வரத்து அடியோடு குறைந்துள்ளது. அதேபோல், வட மாநிலங்களில் நிலவும் அசாதாரண கால நிலையால் தேயிலை வரத்து குறைந்து உள்ளது. இதனால், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரக தேயிலை துாளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக்கிக் கொள்ளும் தனியார் தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள், சிறு விவசாயிகளிடமிருந்து இலைகளை கொள்முதல் செய்யும் நோக்கில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்ணயிக்கும் விலையை விட கிலோவுக்கு கூடுதல், 2 ரூபாய் தருவதாக அறிவித்து, சில நாட்களாக சிறு விவசாயிகளில் இலையை கொள்முதல் செய்து வருகின்றன. இதனால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு இலை வரத்து படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.
பனிப்பொழிவுக்கு முன்பு ஒரு தொழிற்சாலையில் நாளொன்றுக்கு, 15 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சம், 5 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால், தொழிற்சாலையில் இலை கொட்டும் 'டிரப்புகள்' காலியாகி, தேயிலை உற்பத்தி செய்வதில் திணறி வருகிறது.

