/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெட்டப்பட்ட மரத்தை -எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் சிக்கல்
/
வெட்டப்பட்ட மரத்தை -எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் சிக்கல்
வெட்டப்பட்ட மரத்தை -எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் சிக்கல்
வெட்டப்பட்ட மரத்தை -எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் சிக்கல்
ADDED : அக் 09, 2025 11:44 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே காபிக்காடு பகுதியில், நல்ல நிலையில் இருந்த மரத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவில் வெட்டிய பின் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பந்தலுாரில் இருந்து கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், காபிக்காடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில், வளைந்த நிலையில் இருந்த முதிர்ந்த அயனி பலா மரம், அடியோடு வெட்டப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவில், அனுமதி கொடுத்ததாக கூறி, வனத்துறை முன்னிலையில் மரம் வெட்டப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அனுமதி இன்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை, எடுத்து செல்ல வருவாய்த்துறை அனுமதி வழங்கவில்லை.
இதனால் கடந்த பல வாரங்களாக வெட்டப்பட்ட மரத்துண்டுகள் சாலை ஓரத்தில் போடப்பட்டு உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதுடன், மரத்துண்டுகள் காணாமல் போவதும் தொடர்கிறது.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, வெட்டப்பட்ட மரத்தின் துண்டுகளை வருவாய்த்துறை அல்லது வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.