/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
/
துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
ADDED : நவ 26, 2025 07:44 AM
கோத்தகிரி: கோத்தகிரி கக்குச்சி சாலையில் அமைந்துள்ள பனஹட்டி நீரோடை துார் வாரப்படாமல் உள்ளதால், மழை நாட்களில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நீரோடையை நம்பி, பனஹட்டி, அஜ்ஜூர், கக்குச்சி மற்றும் கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலை காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.
வறட்சி நாட்களிலும் வற்றாத இந்த நீரோடை, கடந்த பல ஆண்டுகளாக,துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், ஓடையில் தண்ணீர் தெரியாத அளவுக்கு, புல் மற்றும் காட்டு செடிகள் முளைத்து, ஓடையின் ஆழமும், அகலமும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மழை நாட்களில் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாமல், வறட்சியில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், இந்த பகுதி விவசாயிகள் நலனை பாதுகாக்கும் பொருட்டு, மழை தீவிரமடைவதற்குமுன் துார்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

