UPDATED : ஜூலை 30, 2026 06:15 PM
ADDED : ஜூலை 30, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி காமராஜர் சாகர் அணை கரையோரம் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி அருகே, காமராஜர் சாகர் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாயார், சிங்காரா மின் நிலையத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதுடன், வறட்சி காலங்களில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், அணையின் கரையோர பகுதிகளில் ஆகாய தாமரை வளர்ந்திருப்பதால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்வாரியம் கரையோரம் வளர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றி அதிகளவில் தண்ணீர் சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
