ADDED : ஜூலை 30, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் வி.பி.
தெரு பகுதியில் காய்கறி கடையில் கடந்த, 2 நாட்களுக்கு முன்பு இரவில் முன்பு தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைத்ததால் மார்க்கெட் பகுதியில் தீ பரவ இருந்தது தடுக்கப்பட்டது. அதில், அங்கு வைத்திருந்த, 1400 ரூபாய் உட்பட, 90 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள் எரிந்தது. கடை வைத்திருந்த அனிதா போலீசில் புகார் கொடுத்தனர். இங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. சந்தேகத்திற்குரிய அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
