/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திட்ட செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
/
திட்ட செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 22, 2024 11:25 PM
ஊட்டி:-உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திட்ட செயல்பாடுகளை கலெக்டர் அருணா ஆய்வு செய்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வித் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுடன், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோத்தகிரி தோட்ட தொழிலாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், கூட்டுறவு பண்டகசாலை, டானிங்டன் ரேஷன் கடையை பார்வையிட்ட கலெக்டர் அருணா, பதிவேடு பராமரிப்பு, ரேஷன் பொருட்கள் இருப்பு, வினியோகம், பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எஸ். கைகாட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு, உள் நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை ஆய்வு செய்து, பதிவேடுகளை பார்த்தார். இதில், எஸ்.பி., சுந்தரவடிவேல், கூடுதல் கலெக்டர் கவுசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.