/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் வீடு கட்ட ஒதுக்கிய நிலத்தில் மரம் வெட்ட தடை கண்டித்து மறியல்
/
பந்தலுாரில் வீடு கட்ட ஒதுக்கிய நிலத்தில் மரம் வெட்ட தடை கண்டித்து மறியல்
பந்தலுாரில் வீடு கட்ட ஒதுக்கிய நிலத்தில் மரம் வெட்ட தடை கண்டித்து மறியல்
பந்தலுாரில் வீடு கட்ட ஒதுக்கிய நிலத்தில் மரம் வெட்ட தடை கண்டித்து மறியல்
ADDED : அக் 28, 2025 11:51 PM

பந்தலுார் அக்.29-: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, புஞ்சைக்கொல்லி பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில், புதிதாக குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது அதனைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து, இவர்களுக்கு வீடுகள் கட்ட பரிந்துரை செய்து, ஏழு குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட பணி உத்தரவு வழங்கப்பட்டது.
குழிவயல் என்ற இடத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கீடு செய்தனர். இங்குள்ள எட்டு பெரிய மரங்களை வெட்ட வருவாய் துறை அனுமதி அளித்தது. நேற்று முன்தினம் நிலத்தை சீரமைக்கும் பணியில் பழங்குடியின மக்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர், அனுமதி இன்றி சிறிய மரங்களை வெட்டி அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பணிகள் மேற்கொள்ள தடை விதித்தனார். வீடு கட்ட உத்தரவு கிடைத்தும், வனத்துறை தலையீட்டால் நொந்து போன கிராமத்து மக்கள், நேற்று காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் தலைமையில், குழிவயல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வனச்சரகர் அய்யனார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ. ஷீஜா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரிய மரங்கள் வெட்ட அனுமதி வழங்கிய நிலையில், சிறிய மரங்களை வெட்ட தடை இல்லை என வனச்சரகர் தெரிவித்தார்.
இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

