/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ADDED : டிச 11, 2025 06:06 AM

ஊட்டி: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் மின்னஞ்சல் வாயிலாக பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி, தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு நேற்று இ--மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வழக்கமாக பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இம்முறை, 'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது,' என, இ--மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து, மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மருத்துவ கல்லுாரி வளாகம், சமையலறை, தங்கும் விடுதிகள், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து இடத்திலும் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல், தனியார் பள்ளியிலும் சோதனை நடத்தினர்.
சோதனைகள் முடிவில் புரளி என்று தெரிந்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.