/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: எல்லையில் மதுக்கடைக்கு 'சீல்'
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: எல்லையில் மதுக்கடைக்கு 'சீல்'
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: எல்லையில் மதுக்கடைக்கு 'சீல்'
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: எல்லையில் மதுக்கடைக்கு 'சீல்'
ADDED : டிச 11, 2025 05:55 AM
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், தமிழக எல்லையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இரண்டு நாட்கள் மூடப்பட்டது.
கேரளா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கடந்த, 5ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்த நிலையில், இன்று (11-ம் தேதி) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இதனால்,கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட நிலையில், தமிழக எல்லை பகுதியான, கூடலுார் அருகே சேரம்பாடி, தாளூர், எருமாடு, நம்பியார்குன்னு, அய்யன் கொல்லி ஆகிய ஐந்து டாஸ்மாக் மது கடைகளுக்கும், நேற்றும், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு 'சீல்' வைத்து பூட்டப்பட்டது.
இந்த விவரம் தெரியாமல், கேரளா மற்றும் எல்லையோர பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள், கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தடுக்க, போலீசார் கண்காணிக்க பணியாளர் ஈடுபட்டு உள்ளனர்.

