/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க கலெக்டரிடம் மனு
/
பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க கலெக்டரிடம் மனு
பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க கலெக்டரிடம் மனு
பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க கலெக்டரிடம் மனு
ADDED : டிச 11, 2025 05:53 AM

ஊட்டி: பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி அருகே, பைகமந்து கிராம மக்கள் ஊர் தலைவருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:
பைகமந்து ஊரில், 180 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் ஊர் தற்போது வரை குன்னுார் தாலுகா மற்றும் கேத்தி பஞ்சாயத்தில் உள்ளது. இதனால், அரசு சேவைகளுக்கான சான்றிதழ்கள் பெறுவது உட்பட பல்வேறு பணிக்காக நாங்கள் நெடுந்துாரம் உள்ள, குன்னுார், கேத்தி பகுதிக்கு செல்ல வேண்டும்.
இதன் காரணமாக அலைச்சல் அதிகமாக இருப்பதால் பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் ஊருக்கு சொந்தமான சுமார், 100 ஏக்கர் நிலம் தொட்டபெட்டா பஞ்சாயத்தில் உள்ளது. எங்களுக்கான ஓட்டு ஊட்டி சட்டசபை தொகுதியில் வருகிறது. எங்கள் ஆதார் கார்டு முகவரியில் குன்னுாரும்; ரேஷன் கார்டு முகவரியில் ஊட்டியும் உள்ளது. இதனால், பெரும் குழப்பம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நீலகிரியில், 88 கிராம பஞ்சாயத்துகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் எங்கள் பைகமந்து கிராமம் இடம்பெறவில்லை. எனவே, பைகமந்து கிராமத்தை கேத்தி பஞ்சாயத்தில் இருந்து பிரித்து, தொட்டபெட்டா பஞ்சாயத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

