/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் போராட்டம்
/
ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் போராட்டம்
ADDED : டிச 26, 2024 10:05 PM
குன்னுார்; 'நீலகிரியில், அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தை ரத்து செய்யும், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் மக்கள் கட்சி மாநில மகளிரணி தலைவி வள்ளி ரமேஷ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:
நீலகிரியில் இயங்கும் அரசு பஸ்களில் சாதாரண கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 80 கி.மீ., செல்லும் பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் பார்வைக்கு படும்படி கட்டண பட்டியல் வைக்காமல், அரசு உத்தரவுக்கு புறம்பாக போக்குவரத்துக் கழகம் தன்னிச்சையாக செயல்படுகிறது. ஐகோர்ட் உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.
ஏற்கனவே, 20 சதவீதம் கூடுதல் கட்டணம் அரசு நிர்ணயித்து வசூலிக்கும் நிலையில், அரசு நிர்வாகம் மக்களை சுரண்டும் அவலம் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணாவிட்டால், போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

