ADDED : செப் 23, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி, யில் எல்.பி.எப்., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, எல்.பி.எப். , மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். அதில்,‘மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் ; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ; பொது வினியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்,’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. எல்.பி.எப்., மண்டல தலைவர் ஸ்டீபன், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
