/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிடைக்காத விடியல் பயணம் அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்
/
கிடைக்காத விடியல் பயணம் அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்
கிடைக்காத விடியல் பயணம் அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்
கிடைக்காத விடியல் பயணம் அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2025 11:34 PM
குன்னுார், ; குன்னுார் அதிகரட்டி கிராமத்தில் மகளிருக்கு விடியல் பயண சலுகைகளை அளிக்கக்கோரி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குன்னுார் அதிகரட்டி கிராமத்தில் மாநில அரசு சார்பில், மகளிருக்கான இலவச விடியல் பயண சலுகை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதால், நேற்று மா.கம்யூ., சார்பில் அதிகரட்டி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ஆல்தொரை தலைமை வகித்து பேசுகையில்,'' மாநில அரசின் விடியல் பயணம் சலுகை அதிகரட்டி கிராமத்திற்கு முற்றிலும் மறுக்கப்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அரசையும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
நடவடிக்கை எடுக்கா விட்டால் பாலகொலா, 6வது மைல் பகுதியில் விரைவில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சக்தி, கனகராஜ், பாக்கியராஜ், ஜானகி, சுசீலா உட்பட, 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

