/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு
/
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு
ADDED : ஏப் 08, 2025 09:43 PM
கூடலுார், ; கூடலுார், நாடுகாணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
கூடலுார் நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிருப்தி அடைந்த கிராம மக்கள், முறையாக குடிநீர் வழங்க கோரி, பொன்னூர் பகுதியில் கூடி, கோழிக்கோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனை அறிந்த தேவாலா டி.எஸ்.பி., ஜெயபால், இன்ஸ்பெக்டர் (பொ) செல்வகுமாரி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி,' நகராட்சி நிர்வாகத்திடம் பேசி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.