/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை பணியை பாதியில் நிறுத்தியதால் அதிருப்தி சோலுார் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
சாலை பணியை பாதியில் நிறுத்தியதால் அதிருப்தி சோலுார் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சாலை பணியை பாதியில் நிறுத்தியதால் அதிருப்தி சோலுார் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சாலை பணியை பாதியில் நிறுத்தியதால் அதிருப்தி சோலுார் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 20, 2025 02:30 AM
ஊட்டி: சேலுார் அருகே, சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரி, கிராம மக்கள் சோலுார் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி அருகே, சோலுார், தட்டனேரி, கோட்டட்டி உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், துாபகண்டி, பொட்டலைன், கோக்கால், செலக்கல், கல்லுண்டி, கக்கஞ்சி நகர் ஆகிய, 7 மலை கிராமங்களில் மட்டும், 2,000 தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறனர்.
இந்த கிராம மக்களுக்காக, ஊட்டியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கபட்டு வரும் நிலையில், அந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையை சீரமைத்து, புதிய தார் சாலை அமைத்து தருவதாக கூறி, சோலுார் பேரூராட்சி நிர்வாகம் கடந்த, 2 மாதங்களுக்கு முன் டெண்டர் விட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரர் சாலையை கொத்தி ஜல்லி கற்களை கொட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த கிராமங்களுக்கு இயங்கி வந்த அரசு பஸ்களும் சோலுார் மற்றும் கோக்கால் சந்திப்பு வரை மட்டுமே இயக்கபட்டது.
சாலை பணி விரைவில் முடிக்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்த நிலையில், பணிகள் தொடங்கி இரண்டு மாத காலம் ஆகியும், 50 சதவீத பணிகள் கூட முடிக்கப் படாமல் உள்ளது.
இதனால், கடந்த இரண்டு மாதங்களாக, 7 கிராமங்களுக்கும் அரசு பஸ் செல்லாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், 4 கி.மீ., துாரம் நடந்து வந்து அரசு பஸ்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கிராம மக்கள் கேட்ட போதும் பணிகள் விரைவாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, சோலுார் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், 'தார் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்,' என, பேரூராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

