/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மாற்றம்
/
வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மாற்றம்
ADDED : ஏப் 16, 2025 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுாரில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம், சிம்ஸ்பார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது.
குன்னுார் லாலி அரசு மருத்துவமனை அருகில், செயல்பட்டு வந்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்.ஓ.,) மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, கோவை மண்டல கமிஷனர் வைபவ்சிங் வெளியிட்ட செய்தி குறிப்பில்,' நீலகிரி மாவட்ட தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம், சிம்ஸ்பார்க் பி.எஸ்.என்.எல்., கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், முதலாளிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் பி.எப்., சேவைகளை இங்கு சென்று பயன்படுத்தி கொள்ளலாம்,' என, கூறப்பட்டுள்ளது.