sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழங்குடியின மாணவிக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்

/

 பழங்குடியின மாணவிக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்

 பழங்குடியின மாணவிக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்

 பழங்குடியின மாணவிக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்


ADDED : பிப் 12, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் படிக்கும் பழங்குடியின மாணவிக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கீழ் கோத்தகிரிபகுதியை சேர்ந்த ஆலு குரும்பா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், சமுதாயம் மற்றும் கலாசார நிகழ்வுகளை, இயற்கை முறையில் ஓவியமாக வரைந்ததற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்த நிலையில், இவரின் மூத்த மகள் வாசுகி, ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் படித்து வந்த நிலையில், கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை நிறுத்தினார். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மத்திய அமைச்சர் முருகன், இவரின் படிப்பை தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து கடந்த, 2ம் தேதி மீண்டும் இவர் கல்லுாரியில் சேர்ந்து படிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும், 'சீராக்கு சமூக நல அறக்கட்டளை' நிறுவனர் தினேஷ், தேவையான கல்வி உபகரண பொருட்களை வாங்கினார். அதனை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மாணவியிடம் நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லுாரி நிர்வாக அலுவலர் பசுவலிங்கதேவரு மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us