/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பி.எஸ்.என்.எல்., சேவையில் சிக்கல்: மக்கள் பாதிப்பு
/
பி.எஸ்.என்.எல்., சேவையில் சிக்கல்: மக்கள் பாதிப்பு
பி.எஸ்.என்.எல்., சேவையில் சிக்கல்: மக்கள் பாதிப்பு
பி.எஸ்.என்.எல்., சேவையில் சிக்கல்: மக்கள் பாதிப்பு
ADDED : நவ 07, 2024 11:13 PM
குன்னுார் ; குன்னுாரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குன்னுாரை தலைமையாக கொண்டு பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நீலகிரியில் தனியார் இணைப்புகளை விட பி.எஸ்.என்.எல்., மொபைல் சந்தாதாரர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில், 3ஜி இன்டர்நெட் சேவை, 4ஜி சேவைக்கு மாற்றும் பணிகள் கடந்த மாதத்தில் இருந்து நடந்து வருகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக மொபைல் போன் இணைப்பு கிடைக்காமல், தகவல் பரிமாற முடியாமல், பல வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல இடங்களிலும் இணைப்புகள் கிடைக்காததால், மழை பாதிப்பு குறித்தும் தெரிவிக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர்.
குறிப்பாக, பர்லியார் முதல் குன்னுார் வரையிலான பாதையில் வாகனங்களில் செல்வோருக்கு முழுமையாக சிக்னல் கிடைக்கவில்லை. பொதுவாக பர்லியாரில் மற்ற தனியார் இணைப்புகளை விட பி.எஸ் என்.எல்., சிக்னல் கிடைக்கும் நிலையில், சமீபகாலமாக சேவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் சம்பத்குமார் கூறுகையில்,''தற்போது. 3ஜி சேவையில் இருந்து, 4ஜி சேவைக்கு மாற்றும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதில் சில டவர்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. இந்த பிரச்னை சரி செய்யப்படும்.
சிக்னல் கிடைக்காமல் பாதிப்புகள் ஏற்படும் இடங்களில், தங்களின் மொபைல் போன் செட்டிங்கில், 4ஜி சேவையை 3ஜி சேவைக்கு தற்காலிகமாக மாற்றலாம், விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும். இதன் பிறகு முழுமையான, 4ஜி சேவை கிடைக்கும்,'' என்றார்.