/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
23 ஆண்டுகளாக சீரமைக்காத நடைபாதை அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் புகார்
/
23 ஆண்டுகளாக சீரமைக்காத நடைபாதை அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் புகார்
23 ஆண்டுகளாக சீரமைக்காத நடைபாதை அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் புகார்
23 ஆண்டுகளாக சீரமைக்காத நடைபாதை அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் புகார்
ADDED : மார் 11, 2024 01:19 AM
குன்னுார்:'அ.தி.மு.க.,- தி.மு.க., என இரு கட்சிகள் ஆட்சியில் இருந்த போதும், 23 ஆண்டுகளாக நடைபாதையை சாலையாக மாற்றி தரவில்லை,' என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
குன்னுார் வண்டி சோலைக்கு உட்பட்ட சோலடா மட்டம் கிராமத்தில், 7.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய 'டிரான்ஸ்பார்மர்' துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்து துவக்கி வைத்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''மாநில முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா , 4வது முறையாக லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளார்.
குன்னுார் சட்டசபை தொகுதியில் எனக்கு நீங்கள் ஓட்டு அளித்து வெற்றி பெற வைத்ததை போன்று, வரும் லோக்சபா தேர்தலில் எம்.பி., ராஜாவிற்கும் ஓட்டுக்கள் அளித்து அவரை வெற்றி பெற செய்தால், இந்த பகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன்,''என்றார். தொடர்ந்து, ஊர் தலைவர் ராஜ குலேந்திரன், மனோகரன், சந்திர தாசன், ஜெயக்குமார் உட்பட பலர் பேசினர்.
விழாவின் போது, அமைச்சரிடம் புகார் தெரிவித்த மக்கள், 'சோலடாமட்டம் கல்லறை நடைபாதை, 23 ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளது. அ.தி.மு.க.,- தி.மு.க. இரு கட்சிகளும், இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
விழாவில். குன்னுார் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.

