தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்


ADDED : ஆக 26, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: -

மக்கள் தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகளான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் இம்மாதம் முதல் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை நடந்து வருகிறது.

இப்பணி, 30ம் தேதி நிறைவடைய உள்ளதால், மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக வெளியூரில் தங்கி அவர்களது வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் இருந்தால், சம்மந்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களை தொடர்பு கொண்டு, தங்களது குடும்பம் மற்றும் தனிநபர் தொடர்பான தகவல்களை தவறாமல் வழங்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாகவும், துல்லியமாகவும் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே, மாவட்டத்தை சேர்ந்த வெளியூரில் வசிக்கும் பொது மக்கள் தங்களது தகவல்களை உரிய முறையில் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 தொடர்பான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலக எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us