/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்
/
மக்கள் தொடர்பு முகாம் பெறப்பட்ட 145 மனுக்கள்
ADDED : நவ 14, 2024 05:33 AM

கூடலுார்: கூடலுார் மண்வயல் பகுதியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து, 145 மனுக்கள் பெறப்பட்டன.
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் மாதேஸ்வரன் கோவில் மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, அரசு திட்டங்கள் குறித்து விளக்கி, 38 பயனாளிகக்கு, 3.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து, 145 மனுக்கள் பெற்று, அதன் மீது தீர்வு காண துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முகாமில், கூடுதல் கலெக்டர் கவுசிக், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூடலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.