ஆப்பிள் பி சாலை ஒரு வழி பாதை: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆப்பிள் பி சாலை ஒரு வழி பாதை: பொதுமக்கள் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 14, 2026 07:36 PM
ADDED : ஜூன் 14, 2026 07:32 PM
குன்னூர்:குன்னூர் ஆப்பிள் பி சாலையை, பள்ளி நேரங்களில், ஒரு வழி பாதையாக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னூர் ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஜோசப் மேல் நிலை பள்ளிக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், 35 ஸ்கூல் டிரிப் வாடகை வாகனங்கள் உட்பட, நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
மிகவும் சிறிய சாலையான இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் இரு புறமும் வாகனங்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் , பல குழந்தைகள் நேரமாகி விட்டது என கூறி பாதியில் இறங்கி பள்ளிக்கு ஓடுகின்றனர்.
ஆப்பிள் பி சாலையோரத்தில் மாலையில் பள்ளி விடும் வரை, வாடகை வாகனங்கள் நிறுத்த இடம் பிடிப்பதற்காக அதிக வேகத்திலும் இயக்குகின்றனர். போலீசாரும் கண்டுகொள்வதில்லை. என, பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
எனவே, பள்ளி செல்லும் வாகனங்கள் சப்ளை டிப்போ வழியாகவும், டி.டி.கே சாலைக்கு வரும் வாகனங்கள் பஞ்., யூனியன் சாலை வழியாகவும், காலை 8:15 மணி முதல் காலை 9:15 மணி வரையிலும், மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரையிலும் மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
