/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உரிமையாளர், ஓட்டுனர் விபரங்களுடன் ஆட்டோக்களில் 'கியூ.ஆர்., கோடு'
/
உரிமையாளர், ஓட்டுனர் விபரங்களுடன் ஆட்டோக்களில் 'கியூ.ஆர்., கோடு'
உரிமையாளர், ஓட்டுனர் விபரங்களுடன் ஆட்டோக்களில் 'கியூ.ஆர்., கோடு'
உரிமையாளர், ஓட்டுனர் விபரங்களுடன் ஆட்டோக்களில் 'கியூ.ஆர்., கோடு'
ADDED : டிச 27, 2024 10:07 PM

கூடலுார்; கூடலுாரில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் உரிமையாளர், ஓட்டுனர் விவரங்கள் அடங்கிய, 'கியூ.ஆர்.,கோடு' ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்.
கூடலுாரில், 1000 மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக நகரில், 21 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. இதனை முறைப்படுத்தவும், நகரில் இயக்கப்படும் ஆட்டோகளின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் குறித்த விபரங்களை பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆட்டோக்களிலும் 'கியூ.ஆர்., கோடு' வைக்க, போலீசார் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக, போலீசார் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ உரிமையாளர், ஓட்டுனர்களிடம், 'பாதுகாப்பாக ஆட்டோக்களை இயக்குவது; பயணிகள் பாதுகாப்பு குறித்தும், ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு வைப்பதன் அவசியம்' குறித்து விளக்கினர். தொடர்ந்து, நகரில் இயக்கப்படும் ஆட்டோகளில் அதன் உரிமையாளர், ஓட்டுனர் குறித்த விபரங்களை 'கியூ.ஆர்., கோடு' வசதியுடன் ஒட்டி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'பயணிகள் தங்கள் பயணிக்கும் ஆட்டோ உரிமையாளர், ஓட்டுனர் குறித்த விவரங்களை, தெரிந்து கொண்டு பாதுகாப்பாக பயணிக்க வசதியாக அவர்கள் விபரங்களை 'கியூ.ஆர்., கோடு' வசதியுடன் ஆட்டோக்களில் ஒட்டி வருகிறோம். மேலும், வெளியூர்களில் இயக்க பதிவு பெற்று, கூடலுார் நகரில் இயக்கும் ஆட்டோக்களையும் எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும்,' என்றனர்.

