/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வினாடி-வினா போட்டி: மாணவர்கள் கலக்கல்
/
வினாடி-வினா போட்டி: மாணவர்கள் கலக்கல்
ADDED : அக் 29, 2025 11:33 PM

பந்தலூர்: அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த வினாடி--வினா போட்டியில், மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட கிளையின் சார்பில், கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், துளிர் அறிவியல் வினாடி வினாபோட்டியை நடத்தினார்கள்.
வட்டார அளவில் நடந்த இந்த போட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆசிரியர் மணிவாசகம், வினாடி-வினா போட்டியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் நினைவாற்றலை பெருக்குவதால், பள்ளித் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சாதிக்க பயன்படுவது குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, நடந்த வினாடி வினா போட்டியில் பந்தலூர் வட்டாரத்தில் உள்ள 25 பள்ளிகளை சேர்ந்த, 75 குழுக்களை சேர்ந்த 240 மாணவர்கள் பங்கேற்றனர்.
வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் அறிவியல் மற்றும் பல்வேறு திறன்களை ஆய்வு செய்யும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டு இருந்ததாக, போட்டியில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
போட்டியில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை, வெளிக்காட்டியது ஆசிரியர்களின் பாராட்டை பெற்றது.

