ADDED : அக் 28, 2025 11:53 PM
குன்னுார்: குன்னுார் உபதலை ஊராட்சி கரோலினாவில், புதிய தடுப்பு சுவர் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலை பாதிக்காத வகையில் முழுமையாக தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் உபதலை 5வது வார்டு கரோலினா மற்றும் புதுக்காலனி பகுதிக்கு செல்லும் சாலையோர வளைவில், 2 ஆண்டிற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிக்கும் அபாயம் இருந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்பு சுவர் அமைத்தனர்.
எனினும், சாலை மற்றும் தடுப்பு சுவர் இடையே முழுமை பெறாத நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
கடந்த வாரம் பெய்த மழையால், சாலையின் மேற்பகுதியில் இருந்து அடித்து வந்த மழைநீர் இந்த பகுதியில் அதிவேகத்தில் சென்றதால், புதிய தடுப்பு சுவர் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் மழை நீர்செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்வதுடன், சாலை துண்டிக்காத வகையில், முழுமையாக தடுப்பு சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

