ADDED : நவ 06, 2024 09:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் ; குன்னுாரில் கடந்த, 2ம் தேதியில் இருந்து நாள்தோறும் நள்ளிரவு கன மழை பெய்து வருகிறது.
இதனால், இங்குள்ள நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், குன்னுார் நகராட்சியின், 30 வார்டுகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள, 43.7 அடி உயரமுள்ள ரேலியா அணை மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதனால், குன்னுார் நகருக்கு, 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நகராட்சி முடிவு செய்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ரேலியா அணை நிரம்பி உள்ளதால் கோடை காலத்தில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை,' என்றனர்.