/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் மழை நீர் தேக்கம்; பைக் நிறுத்துவதில் சிரமம்
/
சாலையில் மழை நீர் தேக்கம்; பைக் நிறுத்துவதில் சிரமம்
சாலையில் மழை நீர் தேக்கம்; பைக் நிறுத்துவதில் சிரமம்
சாலையில் மழை நீர் தேக்கம்; பைக் நிறுத்துவதில் சிரமம்
ADDED : நவ 01, 2024 09:58 PM

குன்னுார்; குன்னுார் மவுண்ட் ரோடு பெட்ரோல் பங்க் எதிரே மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் மவுண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம் காரணமாக மக்கள் நடமாடவும் வாகனங்கள் நிறுத்தவும் முடிவதில்லை. மார்க்கெட் வருபவர்களுக்கும் வாகனங்கள் நிறுத்த முடியாததால் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் மவுண்ட் ரோடு பெட்ரோல் பங்க் எதிரே இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறிது மழை பெய்தாலும் இந்த இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அருகிலேயே ஆட்டோ நிறுத்தப்படுவதாலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள், வியாபாரிகள் கூறுகையில், 'நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்காத வகையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இங்கு ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்கவும் வேண்டும்,' என்றனர்.