/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தி அஸ்தி கரைத்த ரன்னிமேடு நினைவு தினம் அனுஷ்டிப்பு
/
காந்தி அஸ்தி கரைத்த ரன்னிமேடு நினைவு தினம் அனுஷ்டிப்பு
காந்தி அஸ்தி கரைத்த ரன்னிமேடு நினைவு தினம் அனுஷ்டிப்பு
காந்தி அஸ்தி கரைத்த ரன்னிமேடு நினைவு தினம் அனுஷ்டிப்பு
ADDED : ஜன 30, 2024 10:56 PM
குன்னுார்:குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே ஆற்றில் காந்தி அஸ்தி கரைக்கப்பட்டதன் நினைவாக, நேற்று மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே ரன்னிமேடு ரயில் நிலையம் உள்ளது. அருகில், குன்னுார், காட்டேரி சிற்றாறுகள் சந்திக்கும் இடத்தில், காந்தியின் அஸ்தியின் சிறு அளவு கரைக்கப்பட்டுள்ளது.
நேற்று, மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில், ரன்னிமேட்டில் நிறுத்தப்பட்ட போது, காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில், நிறுவன தலைவர் நடராஜன் அஸ்தி கரைத்த இடம் அருகே பாறையில் காந்தி படம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார். கடந்த முறை ரயில்வே சார்பில் ரன்னி மேட்டில் காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கபபட்ட நிலையில், நடப்பாண்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த இடத்தில் அனுஷ்டிக்க படவில்லை.