/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்கள்; பரிமாற்றம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்கள்; பரிமாற்றம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்
அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்கள்; பரிமாற்றம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்
அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்கள்; பரிமாற்றம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜூன் 30, 2025 09:28 PM

கோத்தகிரி; 'கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் கம்ப்யூட்டர், சென்னையை சேர்ந்த நமது விஞ்ஞானி சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி அரசு உதவி பெறும், புனித மரியன்னை உயர்நிலை பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) விக்டர் சகாயராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், 1925ல் முதல் முறையாக, குவாண்டம் இயற்பியல் குறித்து கருத்துக்களை கூறினர்.
கடந்த நுாறு ஆண்டுகளில் இந்த துறையில் மிகப் பெரும் அளவிலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடப்பாண்டு முழுவதும், குவாண்டம் அறிவியல் ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நமது பூமி மற்றும் சூரியனை சுற்றி வரும் இதர கோள்கள்,விஞ்ஞானி நியூட்டன் கண்டுபிடித்த விதிகளின்படி, ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தை வரையறுக்கும் இயற்பியல், 'கிளாசிகல் பிஸிக்ஸ்' எனப்படுகிறது. ஒரு அணுவிற்குள் இது போன்ற ஒரு உலகம் இருப்பதை அறிவியல் கண்டறிந்துள்ளது. அணுவை பிளக்கும் போது, அதனுள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்கள் காணப்படுகின்றன.
புரோட்டான் நியூட்ரான்களை பிளக்கும் போது, அதனுள் 'குவார்ட்ஸ்' என்ற, 54 வகையான துகள்கள் காணப்பட்டது. அவற்றில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 'இட்ஸ் இக்ஸ்' போஸான் எனப்படும் கடவுள்துகள் உட்பட ஏராளமான துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த துகள்களில் கண்டுபிடிப்புக்கு மட்டும், 20 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
அணு துகள்களுக்கு இடையே செயல்படும் இயக்க விசை குவாண்டம் விசை என அழைக்கப்படுகிறது. இந்த குவாண்டம் இயக்கத்தை பயன்படுத்தி, அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் கம்ப்யூட்டர், சென்னையை சேர்ந்த நமது விஞ்ஞானி சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' போன்ற நவீன தொழில்நுட்பங்களை கடந்து, அடுத்த நவீன தொழில்நுட்பமாக, குவாண்டம் மெக்கானிசம் வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர்ரிச்சர்ட் வரவேற்றார். ஆசிரியர் தேவ பக்தன் நன்றி கூறினர்.