ADDED : செப் 03, 2026 05:41 PM
ஊட்டி: ஊட்டி ரேஷன் கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணிகளை கலெக்டர் தூக்கி வைத்தார்.
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பணி மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது. அதன்படி, ஊட்டி அருகே, எச்.பி.எப்., இந்துநகர் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
அதிகாரிகள் கூறுகையில்,‘கூட்டுறவுத் துறை வாயிலாக நகர்புறங்களில் செயல்படும், 124 நியாய விலை கடைகளில் மொத்தம், 15,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில், 15 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.
