/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா வழக்கில் பறிமுதல் வாகனங்களுக்கு மறு ஏலம்
/
கஞ்சா வழக்கில் பறிமுதல் வாகனங்களுக்கு மறு ஏலம்
ADDED : ஜன 01, 2026 06:57 AM
ஊட்டி: கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் போகாத வாகனங்களுக்கு, 3ம் தேதி மறு ஏலம் விடப்படுகிறது.
'நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 13 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 13 இருச்சக்கர வாகனங்கள்,' என, மொத்தம், 26 வாகனங்கள் கடந்த, 29ம் தேதி பொது ஏலம் விடப்பட்டது.
அதில், 17 வாகனங்கள் ஏலம் போன நிலையில், ஏலம் போகாத, ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் எட்டு இருச்சக்கர வாகனங்கள் மறு ஏலம் விடப்படுகிறது. ஊட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலக வளாகத்தில், 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு மறு ஏலம் நடக்கிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள், நாளை மறுநாள் (2ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணிவரை நேரில் பார்வையிடலாம்.
ஏலம் எடுப்பவர்கள், இரு சக்கர வாகனத்திற்கு, 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு, 5,000 ரூபாயும் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு, ஊட்டி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 94981 75943 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

