/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.2.26 மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு
/
ரூ.2.26 மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு
ரூ.2.26 மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு
ரூ.2.26 மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு
ADDED : ஜன 01, 2026 06:56 AM
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பிரபுதாஸ், மனோஜ் காணி மற்றும் கணபதி உட்பட, மொத்தம், 21 கவுன்சிலர்களில், 15 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், சாலை பராமரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடைப்பாதை, கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உட்பட, அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர்.
முடிவில், நகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக, பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட, 2.26 கோடி ரூபாயை, அனைத்து வார்டுகளுக்கும் பாரப்பட்சம் இல்லாமல் பிரித்து வழங்கி, வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்வது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

