/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட கிராமங்கள் விபரம்
/
ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட கிராமங்கள் விபரம்
ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட கிராமங்கள் விபரம்
ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட கிராமங்கள் விபரம்
ADDED : ஜன 01, 2026 06:55 AM
குன்னுார்: குன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் இருந்த, 35 ஊராட்சிகளை பிரிக்க கடந்த, 2021ம் ஆண்டு, அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அரசுக்கு பரிந்துரை செய்தார்.
கடந்த மாதம், 27ல், மாநில அரசு வெளியிட்ட அரசாணையில், நீலகிரியில் உள்ள, 35 கிராம ஊராட்சிகளில், 27 ஊராட்சிகளை பிரித்து, 88 ஊராட்சிகளாகவும், மீதமுள்ள, 6 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல், மொத்தம், 96 கிராம ஊராட்சிகளுடன் மறு சீரமைப்பு செய்யப்பட்டது.
அதில், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரிக்கப்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் குறித்த அரசு அறிவிப்பு விபரம்:
மேலுார் ஊராட்சியில், ஆலட்டனை, மேலுார், தேவி வியூ, டிக்லண்ட் லீஸ், கைகாட்டி, காசோலை, கோட்டக்கல், மஞ்சக்கம்பை பஜார், நெடுகல் கம்பை, ஊர் திட்டு, செங்குட்ராயன் லீஸ், வீரக்கம்பை, கொம்புதிக்கை ஆகிய, 13 குக்கிராமங்கள் உள்ளன.
புதிய துாதுார்மட்டம் ஊராட்சியில், அன்னிமண்ணு, பி.சி., காலனி, கிரேக் மோர், கெரடா லீஸ், கீழ் டெரோமியா, கூர்னட்டி, கூட்டங்கிரி, எம்.எம்.பி. காலனி, மகாலிங்கம் காலனி, மேல் டெராமியா, நாக்குநெரி, திலகர் நகர், துாதுார்மட்டம், ஒட்டமல்லன் சாலை, ஆகிய கிராமங்கள் உள்ளன.
புதிய ஆருகுச்சி ஊராட்சியில், அறையட்டி, ஆருகுச்சி, பெள்ளாடா, ஹெத்தைக்கல், கீழ் ஒசட்டி, கொன்னாடா, குரிய மலை, மீன் குளம் மீன்மலை, மேல் ஒசட்டி, நையட்டி, நையட்டி வேலி, ஊராடா சோலாடா, உப்பட்டி, ஆகிய 15 கிராமங்கள் உள்ளன.
புதிய கொலக்கம்பை ஊராட்சியில், அல்சானா, கொலக்கம்பை பஜார், மானார் எஸ்டேட், மருதன் கம்பை, மூப்பர்காடு, முசாபுரி, நீராடிக் கம்பை, நீராளிக்கம்பை, ஊஞ்சலார் கம்பை, பழனியப்பா எஸ்டேட், பழனியப்பா லீஸ், பால்மரா லீஸ், சாம்பூர், சுல்தானா எஸ்டேட், தை மலை லீஸ், துண்டநெரி, உட்லாண்ட்ஸ், 90 ஏக்ரா பகுதி ஆகிய, 18 குக்கிராமங்கள் உள்ளன.
உபதலை ஊராட்சியில், சின்னபிக்கட்டி, சின்ன உபதலை, காந்திநகர், ஆலோரை, ஜெவனா கவுடர் லைன், கக்கன் நகர், காணிக்கராஜ் நகர், காருண்யா நகர்,நரிக்குழி பள்ளம், நேரு நகர், பெரிய பிக்கட்டி, பெரிய பிக்கட்டி கார்னர், பெரிய உபதலை, ஏற்காடு நகர், குறிஞ்சிநகர், எம்.ஜி.ஆர்., நகர், பழத்தோட்டம் கிராமங்கள் உள்ளன.
புதிய வசம்பள்ளம் ஊராட்சியில், அம்பிகாபுரம், கரோலினா, இந்திரா நகர், ஸ்டான்லி பார்க், வள்ளுவர் நகர் வசம்பள்ளம், வசந்தம், நகர், வாசுகி நகர் ஆகியவை உள்ளன.
புதிய சின்ன கரும்பாலம் ஊராட்சியில், ஏழு ஏக்ரா பகுதி, பெங்கால் எஸ்டேட், சின்ன கரும்பாலம், கரிமரா ஹட்டி, பெரிய கரும்பாலம், பெரியார் நகர்,சோகத்தொரை, மந்தாடா, பார்னி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதிகள் உள்ளன.
எடப்பள்ளி ஊராட்சியில், ஆரக்கம்பை, பெள்ளட்டி மட்டம், எடப்பள்ளி, எமகுண்டு, அளக்கரை, அளக்கரை எஸ்டேட், கொட்டுக்கல், மண்டலட்டி, மூக்குமலை, தனலட்சுமி எஸ்டேட், டிரம்ளா, மேல் கரன்சி கிராமங்கள் உள்ளன.
புதிய இளித்தொரை ஊராட்சியில், அனியாடா, ஆசாரி காலனி, இளித்தொரை, இந்திராநகர், முக்கட்டி, குச்சிக்காடு, திப்பு குச்சி, முல்லை நகர் கிராமங்கள் உள்ளன.
பேரட்டி ஊராட்சியில், அன்னை நகர் பேரட்டி, அருள் நகர், சின்ன வண்டிச்சோலை, இந்திரா நகர் காமராஜபுரம், கம்போலா, லயன்ஸ் காலனி உள்ளன.
புதிய கீழ் பாரத் நகர் ஊராட்சியில், பாரஸ்ட்டேல், கல்குழி, கீழ் பாரத் நகர், மேல் பாரத் நகர் பகுதிகள் உள்ளன.

