/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் வீண்
/
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் வீண்
ADDED : ஜன 01, 2026 06:55 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயமாகி வருகிறது.
பந்தலுார் அருகே சேரன் கோடு ஊராட்சியில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2009--10ம் ஆண்டில், 7 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில், சோலாடி ஆற்றில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து தண்ணீரை கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து, வினியோகம் செய்யும் வகையில், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிலையில், பல இடங்களிலும் குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டும், உடைந்தும் காணப்படுகிறது.
இதனால், இந்த குடிநீர் திட்டத்திற்காக மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிடுவதாக கூறப்படும் நிலையில், மக்களுக்கு இந்தத் திட்டத்தால் பயன் இல்லை.
குடிநீர் திட்ட தொட்டிகள் பராமரிப்பு இல்லாமலும், தண்ணீர் எடுத்து செல்லும் குழாய்கள் சாக்கடையிலும் உள்ளதால், வினியோகம் செய்யப்படும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
இந்நிலையில், பல இடங்களிலும் உடைந்து காணப்படும், கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம், தனியார் தோட்டங்கள் பயன்பெறும் வகையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் விரயமாகி வருகிறது.
இதனால் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக துவக்கப்பட்ட, குடிநீர் திட்டம் வெறும் செலவினத்திட்டமாக மாறி வருகிறது. எனவே, இதுகுறித்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

