/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தினமும் அரை மணி நேரம் புத்தகம் வாசியுங்கள்: மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை

ADDED : அக் 16, 2025 08:20 PM

குன்னுார்: 'தினமும் அரை மணி நேரமாவது தங்களுக்கு பிடித்த நுால்களை, மாணவ, மாணவிகள் வாசித்தல் அவசியம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அருவங்காடு கிளை நுாலகத்தில், 'வாசிப்பை நேசிப்போம்; சுவாசிப்போம்' நிகழ்ச்சி நடந்தது.
அதில், அருவங்காடு 'டெம்ஸ்' பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.
நிகழ்ச்சியை, துவக்கி வைத்த நுாலகம் ஜெயஸ்ரீ பேசுகையில்,''பள்ளி மாணவ, மாணவிகள் சிறு வயது முதல் நுாலகம் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்பு எதிர்காலத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். தினமும் அரை மணி நேரமாவது தங்களுக்கு பிடித்த நுால்களை மாணவ, மாணவிகள் வாசித்தல் அவசியம். வரும், 24ம் தேதி முதல் ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலகத்துறை சார்பில் நடக்கும், 10 நாட்கள் புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவியர், பெற்றோருடன் பங்கேற்று பயன்பெறலாம்,'' என்றார். ஆசிரியை மெட்டில்டா நன்றி கூறினார்.