/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை ஊழியர்கள் குறைப்பு; பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு
/
தோட்டக்கலை ஊழியர்கள் குறைப்பு; பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு
தோட்டக்கலை ஊழியர்கள் குறைப்பு; பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு
தோட்டக்கலை ஊழியர்கள் குறைப்பு; பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு
ADDED : ஆக 01, 2025 07:40 PM

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் ஆட்கள் குறைக்கப்பட்டதால், பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பேரூராட்சியாக இருந்த நேரத்தில், நேரு பூங்காவில், நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள், எட்டு பேர் பணியில் இருந்தனர். அப்போது, பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஊழியர்களுக்கான சம்பளம் பேரூராட்சி வழங்கியது.
சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த, ஊழியர்கள் ஆறு பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் குறைப்பு காரணமாக, பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் காற்று காரணமாக, மலர் செடிகள் சாய்ந்தும், பட்டு போய் காய்ந்து வருகிறது. மேலும், இலை சருகுகள் தரை முழுவதும் விழுந்து பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால், பார்வையாளர் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.
மக்கள் கூறுகையில், 'நகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரிக்கும் பொருட்டு, தினக்கூலி அடிப்படையிலாவது, கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி, பூங்காவை பொலிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.