/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி மையம்
/
மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி மையம்
ADDED : செப் 24, 2024 11:36 PM

குன்னுார் : குன்னுார் -கோத்தகிரி இடையே உள்ள நடுஹட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
குன்னுாரில் உள்ள 'கைண்டர் டிரஸ்ட்' சார்பில், நடுஹட்டி கிராமத்தில் கருணை மறுவாழ்வு பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நன்கொடையாளர் ரிஷிபட் நகார் பங்கேற்று புதிய மையத்தை துவக்கி வைத்தார்.
விழாவில், 'கைண்டர் டிரஸ்ட்' நிறுவனர் டயானா பரூச்சா பேசுகையில்,''சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணை இல்லம் துவங்கப்பட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவை வழங்குவதுடன் வாழ்வாதாரத்திற்கான பயிற்சியும் அளித்து வாய்ப்புகள் உருவாக்குகிறது,'' என்றார். மாற்றுத்திறனாளிகள் அழைத்து வர மைக்ரோ லேண்ட் அமைப்பு சார்பில் புதிய ஆட்டோ வழங்கப்பட்டது.
விழாவில் ரோட்டரி சங்க தலைவர் சுனில் கோயல், 'கிளீன் குன்னுார்' அமைப்பு தலைவர் சமந்தா அயனா, நீலகிரி மக்கள் மைய்யம் கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.