/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காருக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடித்து வனத்தில் விட்டதால் நிம்மதி

ADDED : செப் 24, 2025 11:43 PM

குன்னுார்: குன்னுாரில் காருக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
குன்னுார், 'ஸ்பிரிங்பீல்டு' பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு கார் இன்ஜின் பகுதியில், பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு காரை எடுத்து வந்தார்.
அங்கு தீயணைப்பு துறையினர் காரின் இன்ஜின் முன் பகுதி கண்ணாடி அருகே பேனட் பகுதியில் இருந்ததை பிடித்து பாட்டிலில் அடைத்தனர். விஷதன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'சமீப காலமாக குன்னுார் பகுதிகளில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில் வாகனங்களுக்குள் இது போன்று பாம்புகள் உள்ளே ஏறி விடுவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என்றனர்.