/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்
/
பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்
பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்
பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்
ADDED : ஜன 21, 2025 11:28 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திச்சால் பழங்குடியினர் கிராமத்தில் காட்டுநாயக்கர் சமுதாய சங்க கூட்டம் நடந்தது.
மாதன் வரவேற்றார். நிர்வாகி சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், காட்டுநாயக்கர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய ஒருங்கிணைப்பாளராக பினு தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் அனைவருக்கும் வீடு கட்ட முன்னுரிமை வழங்குவதுடன், வனங்களை தவிர்த்து கிராம பகுதிகளில் வீடு கட்டி தர வேண்டும். காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும்.
படித்த காட்டுநாயக்கர் சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும், மாவட்டத்தில் போலி ஜாதி சான்றிதழ் வழங்குவதை தவிர்க்கவும் வேண்டும்; சமுதாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்; பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதை அரசு தடுக்க வேண்டும்; மத்திய அரசின், 'கிசான்' நிதி கிடைக்காத பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், நிர்வாகிகள் வெள்ளூ, சந்திரன், வாசு, மாச்சி, தங்கமணி, கமலா மற்றும் குண்டடா, புஞ்சை கொல்லி, செளிவயல், அம்பலமூலா, மணல் கொல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.