/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒற்றுமை மேம்பட மத நல்லிணக்க நிகழ்ச்சி
/
ஒற்றுமை மேம்பட மத நல்லிணக்க நிகழ்ச்சி
ADDED : நவ 03, 2025 10:02 PM
ஊட்டி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கின்ற தலைப்பில் மத நல்லிணக்க நிகழ்ச்சி ஊட்டி சாதி மஹாலில் நடந்தது.
மாவட்ட தலைவர் சபியுதின் வரவேற்றார். செயலாளர் உமர், பொருளாளர் ஹக்கீம், துணைத் தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், இஸ்லாமியர் அல்லாத பிற மத சகோதர, சகோதரிகளின் இஸ்லாம் தொடர்பான கேள்விகள், குற்றச்சாட்டுகள் விமர்சனங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம், பதிலளித்தார். சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பிற மதத்தினர் மற்றும் முஸ்லிம்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர்.
துணைச் செயலாளர் சிராஜ்தீன், மார்க்கெட் கிளை நிர்வாகிகள் முஜம்மில் ஹிதாயத்துல்லா சலீம் முகமது கலிம் உட்பட பலர் பங்கேற்றனர்.

