/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.532 கோடி!கடந்தாண்டை விட ரூ.22 கோடி கூடுதல் விற்பனை
/
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.532 கோடி!கடந்தாண்டை விட ரூ.22 கோடி கூடுதல் விற்பனை
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.532 கோடி!கடந்தாண்டை விட ரூ.22 கோடி கூடுதல் விற்பனை
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.532 கோடி!கடந்தாண்டை விட ரூ.22 கோடி கூடுதல் விற்பனை
ADDED : நவ 03, 2025 10:01 PM

ஊட்டி:நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் நடப்பாண்டில் இதுவரை. 532 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும், 22 கோடி ரூபாய் இதுவரை கூடுதலாக விற்பனை அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 140 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் கடைகள் குறைக்கப்பட்டு, தற்போது, 73 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல் பட்டு வருகின்றன. 50 சதவீதம் டாஸ்மாக் மதுக் கடைகள் குறைக்கப்பட்டாலும், தினசரி விற்பனை, 1.60 கோடி ரூபாய், வார நாட்கள் மற்றும் சீசன் சமயங்களில், 1.80 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது.
'குளிர் மாவட்டத்தில் மது விற்பனையை அதிகரிக்க வேண்டும்,' என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதால், மதுபான கடைகளுக்கு அதிகளவு மதுபான வகைகள் விற்பனைக்கு வருகிறது.
இதனால், கடைகள் எண்ணிக்கை குறைந்தா லும், விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல இடங்களில், மது கடை திறப்பதற்கு முன்பாகவே, மது பிரியர்கள் கடைக்கு முன் கூடி நிற்பது அதிகரித்து காணப்படுகிறது.
அதில், பெரும்பாலும் இளைஞர்கள் கூட்டம் உள்ளதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு இடத்தில் டாஸ்மாக் கடை மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டாலும், மற்றொரு இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை அதிகரிப்பு மூடப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வேறு பகுதிக்கு சென்று மது வகைகளை வாங்கி செல்வதால் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இதை தவிர, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'சில்லிங்' விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்தகைய விற்பனை அதிகரித்து வருவதால், அங்குள்ள சில இளைஞர்கள், பழங்குடியின மக்கள், அதிகாலையில் போதையில் மூழ்கிவிடுகின்றனர்.
இத்தகைய காரணங்களாக, சமீப காலமாக டாஸ்மாக் மது விற்பனை தினமும் சராசரியாக, 1.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த, 2024ம் ஆண்டில் ஜன., முதல் டிச., மாதம் வரை, 510 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கிற்கு வருமானம் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை, 532 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும், இதுவரை, 22 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
2 5 வயது முதல் 35 வரை உள்ள இளைஞர்கள் அதிகளவில் மது வகைகளை வாங்கி செல்வது சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில், ஊட்டி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்திலும், குடிக்கு அடிமையானவர்களில், 2 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருகின்றனர். மது பழக்கத்தில் 'மூழ்கி' திளைக்கும் இளைஞர் பலர் பல்வேறு நோய்கள் தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

