/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட அளவில் கலைத்திருவிழா: சோலாடா அரசு பள்ளி சாதனை
/
மாவட்ட அளவில் கலைத்திருவிழா: சோலாடா அரசு பள்ளி சாதனை
மாவட்ட அளவில் கலைத்திருவிழா: சோலாடா அரசு பள்ளி சாதனை
மாவட்ட அளவில் கலைத்திருவிழா: சோலாடா அரசு பள்ளி சாதனை
ADDED : நவ 03, 2025 09:56 PM
ஊட்டி:  ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில்,  சோலாடா  அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து பள்ளிக்கு  பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளி கொண்டு வரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை பேச்சு  போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், மணல் சிற்பம் என பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. நீலகிரியில், முதல் கட்டமாக வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தேர்வானவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகள் ஊட்டியில் பார்மஸி கல்லூரி, சி.எம். எம் பள்ளி, அரசு மேல்நிலை பள்ளிகளில் நடந்தது.
இதில்,  6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் அருணா பாவனை நடிப்பு, அக் ஷரா ஓவியம்  வரைதல்,  தீக் ஷா  களிமண் பொம்மை  போட்டியில்  மாவட்ட அளவில் மு தலிடம் பெற்றனர். 3, 4 மற்றும் 5ம் வகுப்பு களுக்கு நடைபெற்ற  போட்டிக ளில் அபிநயா மாறுவேட போட்டியில் முதலிடம், ஒப்புவித்தல் போட்டியில்  ஆதிசிவா இரண்டாம் இடம், ஓவியம் வரைதலில் உமேஷ் மூன்றாமிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற நான்கு மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ள னர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி னர்.

