/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அகற்றப்பட்ட நடைபாதை கடை; வியாபாரிகளுக்கு மாற்றிடம்
/
அகற்றப்பட்ட நடைபாதை கடை; வியாபாரிகளுக்கு மாற்றிடம்
அகற்றப்பட்ட நடைபாதை கடை; வியாபாரிகளுக்கு மாற்றிடம்
அகற்றப்பட்ட நடைபாதை கடை; வியாபாரிகளுக்கு மாற்றிடம்
ADDED : ஏப் 16, 2025 09:23 PM
கூடலுார்; கூடலுார், தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து அகற்றப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, நகராட்சி சார்பில், மாற்றிடம் ஒதுக்கப்பட்டதால் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.
கூடலுார், ஊட்டி மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கடைகள் வைக்க, நிரந்தர இடம் வழங்க நடைபாதை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். கோரிக்கை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்தது. எனினும், மாற்றிடம் ஒதுக்கவில்லை.
அதிருப்தி அடைந்த நடைபாதை வியாபாரிகள், 20ம் தேதி முதல் மீண்டும், நடைபாதையில் கடைகள் வைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், நடைபாதை வியாபாரிகள், கடைகள் வைக்க கோழிக்கோடு சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில், பயன்படுத்தாமல் இருந்த நகராட்சி கழிப்பிடம் கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று நடந்தது. கடைகள் வைக்க மாற்றிடம் ஒதுக்கப்பட்டதால் நடைபாதை வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில், இடிக்கப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றப்பட்ட பின், நடைபாதை வியாபாரிகள் கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவர்,' என்றனர்.